அமலாபாலுக்கு சல்யூட் - காரணம் பாலியல் தொல்லை! | Filmibeat Tamil

2018-02-03 22

சமீபத்தில் நடிகை அமலாபால் தன்னை பாலியல் ரீதியாகச் சீண்டிய தொழிலதிபருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருந்தார். பல நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும், அமலாபால் தைரியமாக போலீஸ் வரை சென்று அந்த தொழிலதிபரை கைது செய்த வைத்தார். தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததற்காக சல்யூட்" எனக் கூறியுள்ளார்.

நடிகை அமலாபால், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அமலாபால் போலீசில் ஒருவர் மீது புகார் செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் செய்தார்.

மலேசியாவில் நடைபெற இருந்த 'டான்சிங் தமிழச்சி' என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்தார் அமலாபால். இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் டான்ஸ் ஸ்கூலில் தீவிரமாக நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Recently actress AmalaPaul had complained to the police against her sexually abusive businessman. Actor Vishal has been talking about this, "Salute for boldly complaining against sexual harassment".

Videos similaires